மதுவிற்கு பதிலாக போதைப் பொருள் பயன்பாட்டை ஆதரித்தால், குற்றங்களைத் தவிர்க்கலாம் - பாஜக எம் எல் ஏ சர்ச்சைப் பேச்சு:

சமூகத்தை சீர்குலைக்கும் விதத்தில் பேசியதாக, பாஜக எம்.எல்.ஏ-வை சட்டிஸ்கரில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுவிற்கு பதிலாக போதைப் பொருள் பயன்பாட்டை ஆதரித்தால், குற்றங்களைத் தவிர்க்கலாம் - பாஜக எம் எல் ஏ சர்ச்சைப் பேச்சு:

சமீப காலமாக பாஜக வைச் சேர்ந்தவர்கள், பெரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று வரை, முன்னாள் பாஜக உருப்பினர் நூபூர் ஷர்மாவின் கருத்து பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தற்போது, மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைக்குறிய கருத்து தெவிவித்துள்ளார். இது பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, (23 ஜூலை) அன்று, பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பந்தி, கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளார். மேலும், “மது போன்றவற்றிற்கு அடிமையாக இருப்பவர்களை மீட்கவும், மதுப் பழக்கத்தால் கொலை கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களை செய்பவர்களைத் தடுக்க, பாங்கு மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்த ஆதரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி ஒரு மோசமான கருத்தை எப்படி கூறினார் என சட்டிஸ்கர் ஆளுங்கட்சியான் அகாங்கிரஸ் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், “நாட்டில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று எம்எல்ஏ பந்தி விரும்பினால், பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

போதைப்பொருள், மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் (Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act) விதிகளின் கீழ் கஞ்சா விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கஞ்சா செடியின் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாங் என்ற உண்ணக்கூடிய கலவையானது அந்த சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மூன்று முறை எம்எல்ஏவாகவும், முன்னாள் மாநில சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்த பந்தி, சமூகத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கூறுவதற்குப் பதிலாக போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற அறிக்கையை எப்படிக் கொடுக்க முடியும் என்று காங்கிரஸின் பிலாஸ்பூர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அபய் நாராயண் ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குறிய இந்த பேச்சால், பிந்து தற்போது பேசுபொருளாகியுள்ளார்.