
பாகிஸ்தானில் சுமார் 200 இந்திய மாணவர்கள் படிப்பதாக கடந்த 2020அம் ஆண்டு தகவல் வெளியானது. அங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு படிக்கச் சென்றால் வேலையோ, உயர்கல்வியோ இந்தியாவில் கிடைக்காது என இந்திய மாணவர்களை உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ எச்சரித்துள்ளன.
இதனிடையே அகதிகளாக இருப்பின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதி பெற்ற பிறகு இந்தியாவில் வேலை மற்றும் உயர்கல்வியை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.