அரசு மருத்துவமனையின் அஜாக்கிரதை... வயிற்றில் துணி வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்...

உத்தரபிரதேசத்தில், மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ளது.

அரசு மருத்துவமனையின் அஜாக்கிரதை... வயிற்றில் துணி வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்...
உத்தரபிரதேச மாநிலம், ராமாபூரை சேர்ந்த நீலம் என்ற பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்தது.
 
ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக அவர் வயிற்று வலி என கூறி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரது கணவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிடி ஸ்கேன் எடுத்ததில், அந்த பெண்ணின் வயிற்றில் துணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அவை வயிற்றிலிருந்து அகற்றப்பட்டாலும், பெண்ணின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், மூச்சுவிடமால் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கவனக்குறைவு செயலுக்கு காரணமானோரை கண்டறிய அரசு மருத்துவமனையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.