பஞ். டெல்லியை தொடர்ந்து பீகார், கேரளாவிலும் மின் உற்பத்தி பாதிப்பு - மின்சாரம் தடைபட வாய்ப்பு

பஞ். டெல்லியை தொடர்ந்து பீகார், கேரளாவிலும் மின் உற்பத்தி பாதிப்பு - மின்சாரம் தடைபட வாய்ப்பு

பஞ்சாப், டெல்லியை தொடர்ந்து பீகார், கேரளா ஆகிய மாநிலங்களும் நிலக்கரி பற்றக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக சுரங்கங்களில் நிலக்கரி  வெட்டி எடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய மின்சாரம் இன்றி மின் சேவை பாதிக்கப்பட கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப், டெல்லி அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வரும் நிலையில் நிலக்கரிக்கு ஏற்பட்டுள்ள பற்றக்குறையை ஒப்புக் கொள்ள மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் பீகார், கேரளா ஆகிய மாநிலங்களும் நிலக்கரி பற்றக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.