ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!!

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசுக்கு நெருக்கடி விடுக்கும் வகையில் அக்கட்சி மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ-கள் பலர் கவுஹாத்தியில் முகாமிட்டுள்ளனர்.

சிவசேனா - காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் பாஜக பின்புலமாக இருப்பது பாஜக தலைவர்கள என சொல்லப்படுகிறது.

கவுஹாத்தியில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல். ஏ-களை தொடர்ந்து சந்தித்து வருவதன் மூலம் இது பட்டவர்தனமாகியுள்ளது.

இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் சில எம்.எல்.ஏ-கள் கவுஹாத்திக்கு வர உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.