
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 93 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 57 ஆயிரத்து 542 ஆக சிகிச்சை பெற்று வரும் நிலையில், 6 ஆயிரத்து 628 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.