அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு... அரசாணை வெளியிட்டது புதுச்சேரி அரசு...

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு... அரசாணை வெளியிட்டது புதுச்சேரி அரசு...

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து  28 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Published on
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது ஜூலை 1ம் தேதியை முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com