இந்தியா பாரத் சர்ச்சை: “இஸ்ரோவை எப்படி அழைப்பீர்கள்?” - காங்கிரஸ் கேள்வி
இந்தியா - பாரத் சர்ச்சைக்கு நடுவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை எப்படி அழைப்பீர்கள் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து வெளியேறுவது உண்மையிலேயே உணர்ச்சிகரமாக தருணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும் எதிர்கட்சிகளின் குரலைக் கேட்க நேரு தயங்கியதில்லை எனவும் அவர் கூறினார்.
இந்தியா - பாரத் சர்ச்சை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | "பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்; அதிமுக பாஜக கூட்டணி கிடையாது" ஜெயக்குமார் திட்டவட்டம்!!