ஆப்கானுக்கு மேலும் 3 டன் கோதுமையை அனுப்பிய இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 3 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா அனுப்பியுள்ளது. 
ஆப்கானுக்கு மேலும் 3 டன் கோதுமையை அனுப்பிய இந்தியா!
Published on
Updated on
1 min read

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையை நாடு சந்தித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து ஆப்கானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வந்த இந்தியா, 50 ஆயிரம் டன் கோதுமை வழங்குவதாக உறுதியளித்தது.

இதைத்தொடர்ந்து பகுதி பகுதியாக இந்தியா கோதுமை அனுப்பி வருவதைத் தொடர்ந்து கூடுதலாக 3 ஆயிரம் டன் கோதுமை அனுப்பி வைக்கப்பட்டது. இதனுடன் இதுவரை 33 ஆயிரத்து 500 டன் கோதுமையை இந்தியா ஆப்கானுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com