இந்தியாவில் உலகின் மிகவும் மோசமான காற்றைக் கொண்ட நகரம்...!!!

இந்தியாவில் உலகின் மிகவும் மோசமான காற்றைக் கொண்ட நகரம்...!!!

உலகின் மிக மோசமான காற்றைக் கொண்ட நகரமாக லாகூர் மாறியுள்ளதாக சுவிஸ் காற்று சுத்திகரிப்பு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் மாசின் அளவு 2 புள்ளி 5 என்ற அளவில் இருந்தால் நுரையீரலை பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் காற்றின் தரம்  2021 இல் 86.5-ஆக இருந்த நிலையில் தற்போது 97.4 மைக்ரோகிராம் அளவிற்கு மோசமடைந்ததுள்ளது. 

இதனால் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மாறியுள்ளது.   இதற்கு அடுத்தபடியாக டெல்லியின் புறநகரில் உள்ள பிவாடியில் மாசு அளவு 92. 7 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   இபிஎஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு... கண்டன ஆர்ப்பாட்டம்!!