இந்திய குடியரசு துணைத் தலைவரின் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு - இந்தியா கடும் கண்டனம்

இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

லடாக்கில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா, சீனா இடையே நடைபெற்ற 13-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றுள்ளது.

இந்தநிலையில் கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்திற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மேற்கொண்ட பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மாநிலங்களுக்கு அதன் தலைவர்கள் பயணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனாவின் செயல் இந்திய மக்களின் பகுத்தறிவு மற்றும் புரிதலுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.