இந்த சட்டம் வந்தால் இந்தியா நெருக்கடியை சந்திக்கும் - உச்ச நீதிமன்ற குழு உறுப்பினர் எச்சரிக்கை

வேளாண் வருவாயை பெருக்குவதற்கு அரசாங்கமும், விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும் என, நிபுணர் குழு உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே பல கட்டங்களாக நீடித்த பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில், பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது.

அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள அனில் கன்வத், வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டால் இந்தியா நெருக்கடியை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஒரு தீர்வு அல்ல என்றும், இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும், இருப்பு வைக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கவலை தெரிவித்துள்ளார்.