இந்திய நீதிபதிகள் "இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதி"....!!

இந்திய நீதிபதிகள் "இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதி"....!!

சில ஓய்வுபெற்ற நீதிபதிகள் "இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதி" என கூறிய மத்திய சட்டத்துறை அமைச்சரின் கருத்திற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிராக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும் என 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.  அதில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தங்களுக்கு எதிராக தேச விரோத குற்றச்சாட்டுகளோடு பல அச்சுறுத்தல்களும் எழுந்து வரும் நிலையில் தங்களை தேசத்தின் தாழ்வைக் குறிப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளனர்.

அதாவது மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜூ சில ஓய்வு பெற்ற நீதிபதிகள் "இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதி" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.  இதற்கு நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  மீட்கப்பட்ட குட்டி யானை... தாய் யானையுடன் சேர்ப்பு!!