இலவச திட்டங்களை கண்டு அஞ்சுகிறதா பாஜக...?

இலவச திட்டங்களை கண்டு அஞ்சுகிறதா பாஜக...?

தேர்தலில் வெற்றி பெற வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கும் பாஜக இலவச திட்டங்களை கண்டு அஞ்சுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் அதிக அளவில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டே வெற்றி பெற்றது.  

வளர்ச்சி திட்டங்கள்:

சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் இளைஞர்களுக்கான திறன் வளர்ச்சி திட்டங்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு திட்டங்கள் நாட்டில் தயாரிப்போம் போன்ற வளர்ச்சி திட்டங்களை அறிவித்தே வெற்றி பெற்றது பாஜக.  கடந்த மாதத்தில் உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதிக அளவில் இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதால் அதிக அளவில் பணம் செலவிடப்படுவதாகவும் அரசு கருவூலம் காலியாகி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

இலவச திட்டங்கள்:

சமீபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைவாக அளிக்க கோரியதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இலவசங்கள் தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் 27,531 கோடியும் பஞ்சாபில் 17,000 கோடியும்  ராஜஸ்தானில் 8,848 கோடியும் மேற்கு வங்காளத்தில் 18,877 கோடியும் தெலுங்கானாவில் 19,830 கோடியும் இலவச திட்டங்களால் அதிகமாக செலவிடப்படுகின்றன என்ற குற்றசாட்டை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

அஞ்சும் பாஜக:

பஞ்சாப் தேர்தலில் அதிக அளவில் வளர்ச்சி திட்டங்களை பாஜக அறிவித்த போதும் இலவச திட்டங்களை அறிவித்த ஆம் ஆத்மியிடம் தோற்றுபோனது.  பொதுதேர்தல் 2024ல் இலவச திட்டங்களால் பாஜக தோற்கும் என்ற அச்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்