இந்தியா ஏழை பணக்கார வேற்றுமை நாடா??!!

இந்தியா ஏழை பணக்கார வேற்றுமை நாடா??!!

இந்தியாவில் ஏழை பணக்காரர் இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

நாக்பூரில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தை குறித்து பேசியுள்ளார். தற்போது நாட்டிற்குள் சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் தேவை என்று அவர் கூறியுள்ளார். சமுதாயத்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகிவிட்டது எனவும்  இதுமட்டுமின்றி சமூக சமத்துவமின்மை போல் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்துள்ளது எனவும் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறி, வளமான நாடாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் வறுமை, பசி, வேலையின்மை, சாதிவெறி, தீண்டாமை, பணவீக்கம் போன்றவற்றைச் சந்தித்து வருவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். இங்கே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகி வருகிறது எனவும் இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைந்த மற்றொரு அமைப்பான பாரத் விகாஸ் பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் பேசுகையில், ”உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நாம் உள்ளோம். ஏழை மக்கள்தொகை கொண்ட வளமான நாடு நாம். நமது நாடு செழிப்பாக உள்ளது ஆனால் நமது மக்கள் பசி, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பணவீக்கம், சாதிவெறி, தீண்டாமை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள். இந்த காரணிகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல. ” என்று கூறியுள்ளார் நிதின்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிற துறைகளிலும் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 124 லட்சிய மாவட்டங்களை மேம்படுத்த ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார் நிதின் கட்காரி.

இதையும் படிக்க:  முட்கள் நிறைந்த கிரீடத்தை ஏற்க தயங்கும் அசோக் கெலாட்!!!