ராகுல் சிறந்த விற்பனையாளரா? அப்படி என்ன விற்றார்!!

கோவாவில் காங்கிரஸின் 11 எம்.எல்.ஏக்களில் 8 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸை விட்டு விலகி கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ராகுல் சிறந்த விற்பனையாளரா? அப்படி என்ன விற்றார்!!

இந்திய விடுதலை போராட்ட காலத்திலேயே தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ஆட்சி செய்து வந்தது.  ஆனால் தற்போது இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்துள்ளது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்களும் எம்.எல்.ஏக்களும் தொடர்ந்து பதவி விலகியிம் பாஜகவில் இணைந்தும் வருகின்றனர்.

மூத்த தலைவர்கள்:

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான குலாம் நபி ஆசாத் கட்சியில் மதிப்பளிக்கப்படவில்லை எனக் கூறி கட்சியிலிருந்து விலகியதோடு மட்டுமில்லாமல் புதிய கட்சியை தொடங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீரில் தேர்தல் வரும் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் இழப்பாகும்.

கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஜி-23 அமைப்பின் முக்கிய உறுப்பினருமான கபில் சிபில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதைப் போலவே பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அஸ்வனி குமாரும் காங்கிரஸுடனான 46 ஆண்டுகால உறவை முடித்துக் கொண்டார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருந்த காலத்தில் குஜராத்தின் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேலும் புறக்கணிக்கப்படுவதாக கூறி கட்சியிலிருந்து விலகினார்.

எம்.எல்.ஏக்கள்..:

காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து பதவி விலகி வந்த நிலையில் தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலகியதோடு நில்லாமல் பாஜகவோடு இணைந்தும் உள்ளனர். ” அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்.” என்றுகூறி இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் ஈடுபட்டுள்ள வேளையில் உண்மையான ஒற்றுமை கோவாவில் தான் நடந்துள்ளது என பிரமோத் சாவன் விமர்சித்துள்ளார்.

கிண்டலடித்த கெஜ்ரிவால்:

” கோடிகளை அளித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.  எனது கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது.  ஆனால் அது நடக்கவில்லை.  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போய்விட்டனர்.  பரிதாபத்துக்குரிய நிலை என்றாலும் காங்கிரஸ்ஸின் இந்த நிலைக்கு காங்கிரஸ் தான் காரணம்” என கிண்டலடித்துள்ளார் கெஜ்ரிவால்.

இதையும் படிக்க: பிரதமர் தேர்தல் நான்முனை போட்டியா?