காங்கிரஸ் ஆட்சிக்கால திட்டங்களை பாஜக மறுசீரமைப்பு செய்ய காரணம் என்ன?!!!

காங்கிரஸ் ஆட்சிக்கால திட்டங்களை பாஜக மறுசீரமைப்பு செய்ய காரணம் என்ன?!!!

தன்னாட்சி அமைப்புகளை மறுமதிப்பீடு செய்வதன் மூலம் அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. 

யுபிஏ ஆட்சிகால திட்டங்கள் மறுசீரமைப்பு:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல தன்னாட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை மத்திய அரசு மேம்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக கூறியுள்ளது.  

இதன் கீழ், அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி அமைப்புகளை இணைத்தல், நீக்குதல் அல்லது ஒழித்தல் போன்ற முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பல்வேறு நிலைகளில் விவாதித்த பிறகு, இந்த பரிந்துரைகள் குறித்து  முடிவெடுப்பதற்காக மத்திய அமைச்சரவையின் முன் வைக்கப்படும் எனவும் அமைச்சகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

யுபிஏ ஆட்சிகால திட்டங்கள்:

தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், தேசிய ஊரக வாழ்வாதார அறக்கட்டளை, தேசிய ஊரக வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் அமைச்சகத்தின் கீழ் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்பட்டவையாகும்.

புதிய திட்டங்கள்:

அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், தேவையை மறுமதிப்பீடு செய்யும் போது, ​​தன்னாட்சி அமைப்புகளை மேமபடுத்துவதற்கான திட்டத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதன் கீழ், தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமை மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைக்கும் திட்டமும் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை:

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பான அமைச்சரவைக் குறிப்புகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அமைச்சரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமைக்கு பதிலாக, தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு அலகு என திட்ட கண்காணிப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளது எனவும் இந்திய கிராமப்புற வாழ்வாதார அறக்கட்டளையை கலைப்பது தொடர்பான திட்டமும் அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:      எதிர்க்கட்சி தலைவர்களின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதா...?காரணம் என்ன?!!