பிரதமர் கனவு காண்கிறாரா பீகார் முதலமைச்சர்.....!!!

நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை விட்டு விலகியதைத் தொடர்ந்து பாஜக மத்திய அமைச்சர், நிதிஷை பாம்பு எனவும் அந்த பாம்பு தற்போது லாலுவின் வீட்டில் புகுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் கனவு காண்கிறாரா பீகார் முதலமைச்சர்.....!!!

பாஜகவின் தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவை தாக்கி பேசியுள்ளார்.

இதற்கு முன்பு 2017ல் லாலுவை விட்டு பிரிந்து நிதிஷ் பாஜகவில் இணைந்தபோது லாலு நிதிஷை பாம்பு எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாம்பு அதன் தோலை உரிக்கும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை சுட்டிகாட்டிய சிங் தற்போது அந்த பாம்பு யாதவின் வீட்டில் நுழைந்துள்ளதாக பேசியுள்ளார்.

மேலும், நிதிஷ் பிரதமர் கனவில் இருப்பதாகவும் அதனாலேயே மக்கள் முடிவுகளை உதறி விட்டு கட்சி தாவியுள்ளதாகவும் சிங் தெரிவித்துள்ளார்.

தனித்து நின்று முதலமைச்சர் கூட ஆக முடியாதவர் பிரதமாராவார் என எவ்வாறு கனவு காணலாம் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த கூட்டணி உடைவதற்கு நிதிஷின் பிரதமர் கனவை தவிர வேறொன்றும் இல்லை எனவும் கூறியுள்ளார் சிங்.

மேலும் படிக்க: வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?

முடிந்தால் நிதிஷ் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற்று காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார் சிங்.