
நுபுர்சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறியதற்காக உதய்பூர் தையல்கடைக்காரரை 2 பேர் கொடூரமாக கொலை செய்தனர். தொடர்ந்து அதனை வீடியோ எடுத்து பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதோடு இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது அமைதியான நிலை தொடர்ந்து நீடிப்பதால், 4 மணி நேரத்துக்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதய்பூர் படுகொலையை பாராட்டி பதிவிடப்பட்ட பதிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.