குழந்தைகள் மீதான தடுப்பூசி பரிசோதனை... மத்திய குழு எதிர்ப்பு...

இந்தியாவில் குழந்தைகள் மீதான கோவோவாக்ஸ்  தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள மத்திய குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் மீதான தடுப்பூசி பரிசோதனை... மத்திய குழு எதிர்ப்பு...
அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி வரும் சீரம் நிறுவனம் தடுப்பூசியின் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
 
கொரோனா வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் தயாரிக்கும் 2வது மருந்து இதுவாகும். இந்தநிலையில் கோவோவாக்ஸ்  தடுப்பூசியை 2 முதல் 17 வயதுடைய குழந்தைகளின் மீது பரிசோதிக்க சீரம் நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், கோவோவாக்ஸ்  தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு மத்திய குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் முதலில் பெரியவர்கள் மீதான பரிசோதனை முழுமையாக முடிக்க உத்தரவிட்டுள்ளது.