"பாஜக ஊழல் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக சிதைந்துள்ளன" பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...!!

"பாஜக ஊழல் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக சிதைந்துள்ளன" பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...!!

பெங்களூரு உட்கட்டமைப்பை மேம்படுத்த பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பாஜக ஊழல் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக சிதைந்துள்ளன என பெங்களூருவில் பிரச்சாரத்தின் போது பாஜகவுக்கு எதிராக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேர்தல் பரப்புரை கடைசி நாளான இன்று பெங்களூருவில் விஜயநகர், சிக்பேட் உள்ளிட்ட பல தொகுதிகளில் பிரியங்கா காந்தி ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தார். கோவிந்த்ராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணாவை ஆதரித்து நகரில் பல இடங்களில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்த நிலையில் பொதுமக்கள் முன்பு உரையாற்றிய போது பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். Image

பெங்களூரு உட்கட்டமைப்பை மேம்படுத்த பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக அரசு அதில் பெரும் ஊழல் செய்த காரணத்தினால் நகர் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுவதாக குற்றம் சாட்டினார் மேலும் மோசமான சாலையில் விபத்தில் சிக்கி இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  

Image
பெங்களூரு நகரில் மோசமாக உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை காரணமாக கொண்டும் பாஜக ஊழல் காரணமாக கொண்டும் மோட்டோ ரோலா, நோக்கியா, சேம்சங் போன்ற பெரிய நிறுவனங்கள் இங்கிருந்து வெளியேறி விட்டதாக கூறிய அவர் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு பெங்களூரு நகரின் மோசமான சாலைகள் சீர் செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?