இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது - பாஜக நிர்வாகியின் சர்ச்சைக் கருத்து குறித்து ராகுல்காந்தி ட்வீட்!

பாஜக செய்தித்தொடர்பாளரின் சர்ச்சைப் பேச்சைத் தொடர்ந்து, இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இதுவென காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது - பாஜக நிர்வாகியின் சர்ச்சைக் கருத்து குறித்து ராகுல்காந்தி ட்வீட்!
Published on
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா மற்றும் அக்கட்சியின் நிர்வாகி நவீன் ஜிண்டால் ஆகியோர், முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்து வெளியிட்டனர்.

இச்சம்பவத்திற்கு குவைத், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவிடம் விளக்கமும் கேட்டுள்ளன.

இந்நிலையில், வெறுப்புணர்வு மட்டுமே வெறுப்புப் பேச்சை வளர்க்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, அன்பு மற்றும் சகோதரத்துவம் மட்டுமே இந்தியாவை முன்னேற்றும் எனவும், இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இதுவெனவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com