கர்நாடக: ஹிஜாப் அணிந்து வந்த மாணவி.. ஹிஜாபைக் கழற்றச் சொன்னதால் பரபரப்பு!!

கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக: ஹிஜாப் அணிந்து வந்த மாணவி.. ஹிஜாபைக் கழற்றச் சொன்னதால் பரபரப்பு!!
Published on
Updated on
1 min read

கர்நாடகாவில், ஹிஜாப் தொடர்பான சர்ச்சை பெறும் புயலை கிளப்பியதால், அங்கு பதற்றத்தை தணிக்க 3 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்ற நிலையில், பள்ளிகளை திறக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய தற்காலிக தடை விதித்தனர்.

அதன்படி, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாண்டியாவில் உள்ள பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை பள்ளி நிர்வாகம் தடுத்து நிறுத்தி, ஹிஜாபைக் கழற்றச் சொன்னதால், பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com