கர்நாடகா தேர்தல் - இன்றுடன் நிறைவடையும் வேட்புமனுத்தாக்கல்...!

கர்நாடகா தேர்தல் - இன்றுடன் நிறைவடையும் வேட்புமனுத்தாக்கல்...!
Published on
Updated on
1 min read

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவுறுவதால், மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறூம் என்றும்,13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அனல்பறக்கும் பிரசாரத்தை வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பாஜகாவும், காங்கிரஸும் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை மூன்று கட்டங்களாக வெளியிட்டது.  அதன்படி, இறுதி வேட்பாளர் பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பரபரப்புகளுக்கு மத்தியில், மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுவதால், வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஷிகோன் தொகுதியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, வருணா தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, ஹூப்ளி-தார்வாட் தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டார், ஷிகாரிப்புரா தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com