கர்நாடக தேர்தல் - இன்று வரை கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் பறிமுதல்...!

கர்நாடக தேர்தல் - இன்று வரை கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் பறிமுதல்...!
Published on
Updated on
1 min read

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி இதுவரை 83 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட சட்டபேரவைக்கு வரும் மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அவர்கள் இன்று வரை நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத 83 கோடியே 42 லட்சத்து 47 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கமும், 57 கோடியே 13 லட்சம் மதிப்பிலான மதுபானமும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 கோடியே 56 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com