
முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் 35 லட்சம் பேருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், ஜோஜூ ஜார்ஜ், உன்னி முகுந்தன் மற்றும் சில அரசியல் கட்சிகள் பேசி வருகின்றனர்.
பழமை வாய்ந்த அந்த அணையை தகர்க்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களிலும், நடிகர்களும் இப்படி பேசியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதற்கு மத்தியில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அணைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளார்.