"நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும்" குமாரசாமி!

"நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும்" குமாரசாமி!
Published on
Updated on
1 min read

நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த 10ம் தேதி  224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேரதல் நடந்தது. இதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்று தனிப்பெருன்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. இத்தேர்தலில் பாஜக 66 இடங்களையும் மதசார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களையும் கைப்பற்றின. இந்நிலையில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று ஜனதாதளம் கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணாவில் வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்த முறை ஜனதாதளம் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் சிலரின் சதி மற்றும் பொய் குற்றச்சாட்டுகளால்  3 சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வரும் காலத்தில் ஜனதாதளம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் சட்ட சபைக்கான தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களே ஆகியுள்ள  நிலையில் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறியுள்ளது அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com