ஆதார் உடன் பான் எண்ணை இணைக்க இறுதி காலக்கெடு!

ஆதார் உடன் பான் எண்ணை இணைக்க இறுதி காலக்கெடு!

ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

வருமான வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் ஆதார் அட்டையுடன், பான் கார்டு எனப்படும் நிரந்தர வருமான வரி கணக்கு எண்ணை இணைப்பது மத்திய அரசால் அவசியமாக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தாலும் இந்த கெடு அபராதத்துடன் நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதி வாய்ப்பாக ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.  இதற்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

மேலும், ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30-ஆம் தேதிக்கு பிறகு செயலற்றதாகி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க"காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம்" மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை!: