ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 7 கோடிக்கு ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 7 கோடிக்கு ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 2-வது அலையில் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் குறைய துவங்கியதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டது. அதன்படி, மதுபானக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை .

 

இந்த நிலையில், 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுபான கடை திறக்கப்பட்டதால் , குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதனால் மதுகடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஒரு நாளில், புதுச்சேரி மாநிலம் முழுதும்  3 முதல் 4 கோடி வரை மதுபானம் விற்பனையாகும். ஆனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. 2 ஆம் நாளான நேற்றும் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது குறிபிடத்தக்கது.