மெட்ரோவில் பயணித்த இதயம்! சிறப்பு மெட்ரோவின் வைரல் போட்டோக்கள்!

மருத்துவ குழு ஒன்று ஹைதராபாத்தில் முதன் முறையாக துடிக்கும் இதயத்தை மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் சென்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மெட்ரோவில் பயணித்த இதயம்! சிறப்பு மெட்ரோவின் வைரல் போட்டோக்கள்!

2013ம் ஆண்டு வெளியான தமிழ் படம், “சென்னையில் ஒரு நாள்”. சேரன், சரத் குமார், சூர்யா, பிரகாஷ் ராஜ், ராதிகா சரத் குமார் என பல பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த படமானது, ஒரு உடலுறுப்பை எடுத்துச் செல்லும் ஒரு திரில்லர் கதையாக வெளியானது.

ஒரு உடலுறுப்பை எடுத்துச் செல்ல மிகவும் குறைந்த நேரமே தேவைப்படும் பொருட்டு, சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு அந்த உறுப்பை எடுத்துச் செல்லும் ஆம்புலென்ஸ் மட்டும் பயணிக்க பச்சை வழித்தடம் உருவாக்கப்படும். பலத்த பாதுகாப்புடன் அதிவேகமாக எடுத்துச் செல்லப்படும் உடலுறுப்புகள் பாதுகாப்பாக நோயாளிடம் சேரும் வரை பதற்றமே நிலவியிருக்கும்.

மேலும் படிக்க | இனி இந்தியாவிலும் மெட்ரோவில் தண்ணீருக்கடியில் பயணிக்கலாம்!!!

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் பொது போக்குவரத்து பயன்படுத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும். அதிலும், அதிகமானோர் பயன்படுத்தும் ரயில், குறிப்பாக மெட்ரோ ரயிலை பயன்படுத்துவது மிகவும் கடினம். இப்படிப்பட்ட நிகழ்வு, இந்தியாவில் நடந்திருக்கிறது.

ஹைதராபாதில், நேற்று, அதாவது திங்கட்கிழமை அன்று, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, மெட்ரோ ரயில் அதிகாரிகளை அழைத்து, ஒரு உயிரைக் காப்பாற்ற, அறுவடை செய்யப்பட்ட இதயத்தை மாற்றுவதற்கான உதவியைக் கோரியது. துடிக்கும் இதயத்தை நாகோலில் இருந்து ஜூப்ளி ஹில்ஸ் செக் போஸ்ட் மெட்ரோ நிலையத்திற்கு கொண்டு செல்ல HRM குழு விரைவாக ஒரு சிறப்பு ரயிலை அமைத்து, இதை எளிதாக்கும் வகையில் பசுமை வழியை இயக்கியது.

மேலும் படிக்க | ராமாபுரத்தில் நடந்த விபத்து! டிரைவர் உட்பட 7 பேர் படுகாயம்!

Pics: Hyderabad Metro turns lifeline, transports heart for transplant | The  News Minute

அதிகாலை 1:00 மணியளவில், எல்.பி.நகரில் உள்ள காமினேனி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழு, அறுவடை செய்யப்பட்ட இதயத்தை நாகோல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றது.

சுமார் 25 நிமிடங்களில், HRM ஊழியர்கள், ஜூப்ளி ஹில்ஸ் சோதனைச் சாவடிக்கு நேரடியாக இதயத்தைப் பெற மருத்துவக் குழுவிற்கு உதவினார்கள். மெட்ரோ ரயில் நிலையத்தில், உயிருள்ள உறுப்பு மற்றும் துணை மருத்துவ ஊழியர்களை எடுக்க அப்பல்லோ ஜூப்ளி ஹில்ஸ் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. அங்கிருந்து மருத்துவமனைக்கு துடிக்கும் இதயம் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் படிக்க | கணவர்களுக்கு உறுப்பு தானம் செய்த மனைவிகள்! தலைநகரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Hyd Metro Rail Provides Green Channel to Transport Beating Heart from LB  Nagar to Jubilee Hills

L&T Metro Rail (Hyderabad) Limited இன் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான KVB ரெட்டி, மெட்ரோ சேவைகள் மனித குலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டது தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாகத் தெரிவித்ததோடு, எதிர்காலத்திலும் இதுபோன்ற போற்றத்தக்க முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறினார்.

மேலும் படிக்க | மாணவியின் உடலுறுப்புகள் தானம் செய்த பெற்றோர்!

3ம் வரிசையில் பணி புரிந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஹைதராபாத் மெட்ரோ நிறுவனத்தால் தான், நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதன்முறையாக நடந்த இச்சம்பவம், அனைவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகிறது. மேலும், இதன் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் படு பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | கல்லீரலையும் நிலத்தையும் விட்டுக்கொடுத்து, குழந்தையை மீட்ட தந்தை! நெகிழ வைத்த வைரல் சம்பவம்!