ஷாருக்கான் மகனுடன் செல்பி எடுத்து வைரலான நபருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்  

போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஷாருக்கான் மகனுடன் செல்பி எடுத்து வைரலான நபருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் மகனுடன் செல்பி எடுத்து வைரலான நபருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்   

போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஷாருக்கான் மகனுடன் செல் பி எடுத்து வைரலான நபருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப் பிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரணைக்கு அழைத்து செல்லும் போது அவருடன் செல் பி எடுத்து கொண்ட கே. பி.கோசவி, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செல் பி புகைப்படம் வைரலான நிலையில், இந்த கே. பி.கோசவி யார்? என போலீசார் கண்டறிந்துள்ளனர். 3 லட்ச ரூபாய் மோசடி வழக்கில் தொடர்புடையவர் என்றும், 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருக்கும் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப் பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டை விட்டு கோசவி வெளியேறுவதை தடுக்கும் வகையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, புனேவை சேர்ந்த ஒருவரை ஏமாற்றியதாக, கோசாவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.