ஹாியானா: வெள்ள பாதிப்பை பார்வையிட தாமதம்; எம்எல்ஏ கன்னத்தில் பளார்!

ஹாியானா: வெள்ள பாதிப்பை பார்வையிட தாமதம்; எம்எல்ஏ கன்னத்தில் பளார்!

Published on

ஹாியானாவில் வெள்ள பாதிப்புகளை பாா்வையிட வந்த ஜனநாயக் ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரை பெண் ஒருவா் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதில் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரை பகுதிகளில் ஏற்பட்ட உடைப்பில் 100க்கும் மேற்பட்ட ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. 

மேலும் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 10பேர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் இந்நிலையில் ஹரியானா மாநிலம் குலாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை குலா சக்கா தொகுதியின் ஜனநாயக் ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினா் ஈஸ்வா் சிங் வந்திருந்தாா். 

அப்போது அங்கிருந்த பெண் ஒருவா் "அவரை இவ்வளவு நாளாக வராத நீ இப்போது ஏன் வந்தாய்?" என ஒருமையில் பேசி கன்னத்தில் ஓங்கி பாளார் என அறைந்தாா். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாா் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இந்த காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com