”எங்களுக்குள் மகாபாரதம் நடக்கவில்லை.....” சட்ட அமைச்சருக்கு பதிலடி தந்த காங்கிரஸ்.....நடந்தது என்ன?!!!

”எங்களுக்குள் மகாபாரதம் நடக்கவில்லை.....” சட்ட அமைச்சருக்கு பதிலடி தந்த காங்கிரஸ்.....நடந்தது என்ன?!!!

நீதித்துறையின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

தாக்கி கொள்ளவில்லை:

டெல்லி நீதிமன்றத்தில் குடியரசு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதித்துறையின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்ய மோடி அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.  

மேலும் தெரிந்துகொள்க:   இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அநியாயமானது....

மேலும் அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் நாம் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறோம் என்றோ, எங்களுக்குள் மகாபாரதம் நடக்கிறது என்றோ அர்த்தம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

விமர்சனம்:

சட்ட அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அதில், "நீதித்துறையை சீரழிக்க மோடி அரசு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லையா....உங்களது சர்ச்சைக்குரிய அறிக்கைகள் அனைத்தும் நீதித்துறையை வலுப்படுத்தும் வகையில் உள்ளதா? நீங்கள் நம்பலாம். நாங்கள் வழக்கறிஞர்கள் இல்லை.” என பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தொண்டர் மீது கல்லெறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்....காரணம் என்ன?