பாஜகவின் தேவையற்ற கருத்தால் நாடு அவமானத்தை சுமந்து நிற்கிறது - உத்தவ் தாக்கரே சாடல்!

பாஜக செய்தித் தொடர்பாளரின் தேவையற்ற கருத்தால் நாடு அவமானத்தை சுமந்து நிற்பதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.
பாஜகவின் தேவையற்ற கருத்தால் நாடு அவமானத்தை சுமந்து நிற்கிறது - உத்தவ் தாக்கரே சாடல்!
Published on
Updated on
1 min read

பா.ஜக வின் நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் ஆகியோர் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக செய்தித் தொடர்பாளரின் தேவையற்ற கருத்தால் நாடு அவமானத்தை சுமந்து நிற்பதாகவும் மாநிலத்தில் ஒலிபெருக்கி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து மத ரீதியிலான பிரச்சனையை பாஜக ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com