பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி..!

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி..!

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என  பிரதமர் மோடியை  நேரில் சந்தித்து  மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி வந்தடைந்த மம்தா பானர்ஜி:

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி 4 நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார். பிரதமர் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

மோடியை சந்தித்த மம்தா:

இந்த நிலையில்  டெல்லியில் பிரதமர்  மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக  மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது மேற்குவங்க மாநிலத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் மற்றும் புதிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

சந்தேகம்:

முன்னதாக மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு  நெருக்கமான நடிகையின் வீட்டின்  ரகசிய அறையில் இருந்து  கோடி கோடியாக  பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 50 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்கம் வைரம் வைடூரியம்  உள்ளிட்ட ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை மம்தா சந்தித்து  பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.