
மணிப்பூரில் பெண்கள் ஆடையின்றி அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு உணர்ச்சிப்பூர்வமானது மட்டுமின்றி தேசியப் பாதுகாப்புடனும் தொடர்புடையது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க எதிர்கட்சிகள் விரும்பவில்லை", என்று குற்றம் சாட்டினார்.
மேலும், "ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து காங்கிரஸ் கேட்க விரும்பவில்லை" என்றும் "மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது நிகழ்ந்த கொலைகளை திரினாமூல் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்காக வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்ததாகவும்' சாடினார்.