மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மேரிகோம் கோரிக்கை...!!

மணிப்பூரில் அமைதியை  நிலைநாட்ட மேரிகோம் கோரிக்கை...!!
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குத்துச்சண்டை வீரர் மேரிகோம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மெய்டீஸ் என்னும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை  பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனை எதிர்த்து அம்மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. 

தொடர்ந்து மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குத்துச்சண்டை வீரர் மேரிகோம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், கலவரம் தொடர்பாக முதலமைச்சர் பிரேங் சிங்கை போனில் அழைத்து நிலைமை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இன்று ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com