கொரோனா காலத்திலும் அதிகரித்த ஊழல்... கோவா அரசு மீது குற்றம் சாட்டும் மேகாலயா ஆளுநர்...

கோவா பா.ஜ.க அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்

கொரோனா காலத்திலும் அதிகரித்த ஊழல்... கோவா அரசு மீது குற்றம் சாட்டும் மேகாலயா ஆளுநர்...

கொரோனா காலத்தில் கோவா அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் அதிகரித்து இருப்பதாக முன்னள் ஆளுநர் சத்ய பால் மாலிக் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மேகாலாயவின் ஆளுநராக தற்போது இருந்து வரும் சத்ய பால் மாலிக், தான் கோவா ஆளுநராக இருந்தப் போது கொரோனா காலத்தில் கோவா அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் மலிந்து இருந்ததாகவும், வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமும் லஞ்சம் வாங்கி கொணடுதான் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்ததால் தமது பதவி பறிக்கப்பட்டது என்று பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கோவாவில் ஆளும் பா. ஜ.க. அரசின் மீது முன்னாள் ஆளுநர் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.