விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட பயணி....விமானத்தில் அதிகரிக்கும் முறைகேடான சம்பவங்கள்....

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட பயணி....விமானத்தில் அதிகரிக்கும் முறைகேடான சம்பவங்கள்....

டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பயணி கைது:

ஸ்பைஸ்ஜெட் பாதுகாப்பு அதிகாரியின் புகாரின் பேரில், டெல்லி-ஹைதராபாத் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பெண் பணியாளர் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பயணி அப்சர் ஆலமை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?:

தகவலின்படி, திங்களன்று ஸ்பைஸ்ஜெட்டின் SG-8133 டெல்லி-ஹைதராபாத் விமானத்தில் பயணி ஒருவர் கேபின் பணியாளர்களை துன்புறுத்தியுள்ளார்.  ஸ்பைஸ்ஜெட்டின் கூற்றுப்படி, ஸ்பைஸ்ஜெட்டின் விமானம் 23 ஜனவரி 2023 அன்று டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு பறந்தது.  டெல்லியிலிருந்து விமானம் புறப்படும் போது ​​பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில்...:

கடந்த சில மாதங்களாகவே விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் முறைகேடான சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.  ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்த சம்பவம் தவிர, டிசம்பர் 6, 2022 அன்று பாரிஸிலிருந்து புது டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் AI-142 இல் பயணிகளின் தவறான நடத்தை இரண்டு சம்பவங்கள் டிஜிசிஏ-ன் கவனத்திற்கு வந்துள்ளன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  குடியரசு தினவிழா அணிவகுப்பு....அன்றுமுதல் இன்று வரை.....