போலி ஒத்திகை நடத்திய காவல்துறை......இழிவுப்படுத்தப்பட்ட சமூகம்...நடந்தது என்ன?!!!

போலி ஒத்திகை நடத்திய காவல்துறை......இழிவுப்படுத்தப்பட்ட சமூகம்...நடந்தது என்ன?!!!

Published on

பிரசித்தி பெற்ற மகாகாளி கோவிலில் கடந்த ஜனவரி 11-ம் தேதி ஒரு போலி ஒத்திகை நடத்தப்பட்டது, அதில் ஒரு  பயங்கரவாதிகள் கும்பல் வழிபாட்டுத் தலத்தைக் கைப்பற்றி பக்தர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தது.

போலி ஒத்திகை:

மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள கோவிலில் போலீசார் நடத்திய போலி ஒத்திகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் வேடம் போட்ட போலீசார், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.  

மேற்கொண்டவர்கள்:

உள்ளூர் காவல்துறை, பயங்கரவாத எதிர்ப்புப் படை, சிறப்புப் போர்ப் பிரிவு சி-60, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போலிப் பயிற்சியை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கு:

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் குழு மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளது. 

மீண்டும் நடக்காமல்..:

அதே நேரத்தில், இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?:

இங்குள்ள பிரசித்தி பெற்ற மகாகாளி கோவிலில் கடந்த ஜனவரி 11-ம் தேதி ஒரு போலி ஒத்திகை நடத்தப்பட்டது. அதில் ஒரு குறிப்பிட்ட பயங்கரவாதிகள் கும்பல் வழிபாட்டுத் தலத்தைக் கைப்பற்றி பக்தர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததாக மக்களை நம்ப செய்தனர்.

இதி குறித்து வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள் இதுபோன்ற கோஷங்கள் மற்றும் சித்தரிப்புகளுக்கு எதிராக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் எனவும் காவல்துறையின் இந்த செயல் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு சமம் எனவும் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை...:

இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தனது துறை எடுக்கும் என்று எஸ்பி ரவீந்திர சிங் பர்தேஷி கூறியுள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com