குரங்கு அம்மை நோய்: வழிகாட்டு நெறிமுறை வௌியிட்ட மத்திய அரசு

குரங்கு அம்மை நோய்: வழிகாட்டு நெறிமுறை வௌியிட்ட மத்திய அரசு

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில், சர்வதேச பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை நோய், தற்போது இந்தியாவுக்கும் பரவியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய ஒருவர் தொற்று பாதிப்புக்கு ஆளானதை அடுத்து, அம்மாநிலத்திற்கு உயர்மட்ட மருத்துவ குழுவை அனுப்பி வைத்த மத்திய அரசு, மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்திடும் விதமாக வெளிநாட்டு பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சர்வதேச பயணிகள் இறந்த விலங்குகள், நோயாளிகளுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.