நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பிக்கள் பங்கேற்பு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் இன்று அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பிக்கள் பங்கேற்பு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது நாளை தொடங்கி வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், அக்னிபாத், வேலையின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, அவை கூட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜூன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட எம். பிக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அவை கூட்டத்தை சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்துவது குறித்து எம்.பிக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று சபாநாயகர் ஓம். பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.