62 ஆயிரம் புள்ளிகளை கடந்து மும்பை பங்கு சந்தை புதிய உச்சம்  

வரலாற்றிலேயே முதல் முறையாக மும்பை பங்குச் சந்தை 62 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

62 ஆயிரம் புள்ளிகளை கடந்து மும்பை பங்கு சந்தை புதிய உச்சம்   

வரலாற்றிலேயே முதல் முறையாக மும்பை பங்குச் சந்தை 62 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகளால், இந்திய வர்த்தக சந்தை புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை பல உச்சங்களை தொட்டு சாதனை படைத்து வருகிறது. அதன்படி மும்பை பங்குச் சந்தை இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 346 புள்ளிகள் வரை உயர்ந்து 62 ஆயிரத்து 111 என வர்த்தகமாகியுள்ளது. இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 489 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது.

இதில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன பங்குகள் 2. 44 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டன. இதேபோல் டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் சற்று உயர்வை கண்டன.