நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது…  

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது…   

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் தொடங்கியது. தமிழ், மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெறும்.

நாடு முழுவதும் மூவாயிரத்து 862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 24 மையங்களில், 40 ஆயிரம் மாணவர்கள், 70 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

வழக்கமான தேர்வு விதிமுறைகளுடன், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடித்து தேர்வு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் 14 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வை, 7 ஆயிரத்து 123  மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் காக்காவாடியில் உள்ள வேளம்மாள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வெண்ணைமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆகிய 2 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 477 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.