நாடு முழுவதும் சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமல்...!

நாடு முழுவதும் சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமல்...!

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு 50 ரூபாய் வீதம் உயர்ந்த நிலையில் தற்போது சென்னையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஆயிரத்து118 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. 

இதையும் படிக்க : "எரிவாயு விலை குறைப்பு பிரதமரின் தேர்தல் பரிசு" காங்கிரஸ் கட்சி விமர்சனம்!!

விலையை குறைக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று திடீரென அறிவித்தது. இதனை தொடர்ந்து, சென்னையில் ஆயிரத்து118 ரூபாய் 50 காசுகளாக உள்ள வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, இன்று முதல் 918 ரூபாய் 50காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.