கேரளாவில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!!

கேரளாவில் இன்று முதல் கொரோனா புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!!

 நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் கேரளாவில் மட்டும் நிலைமை இன்னும் சீரடையவில்லை.

இந்நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல் கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஓணம், முகரம், ஜன்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி மற்றும் துர்கா பூஜை போன்ற விழா காலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைகள், சந்தைகள், வங்கிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தொழில்துறை நிறுவனங்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் பிற நிறுவனங்களை வாரத்தில் 6 நாட்களுக்கு திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை தவிர்க்க கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.