
ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது உத்தரபிரதேசத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வரும் 25 -ஆம் தேதி முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாகவும், திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் உத்தரவிடப்படுள்ளது.
இதனிடையே பஞ்சாபில் தற்போது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் ஆனால் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவித்துள்ளார்.