பட்ஜெட் அல்வா தயாரித்த நிர்மலா சீதாராமன்.....

பட்ஜெட் அல்வா தயாரித்த நிர்மலா சீதாராமன்.....

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதைக் குறிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அல்வா தயாரித்தார். 

ஆண்டு தோறும் நிதிநிலை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா தயாரிப்பது வழக்கமாகும். அதன்படி, 2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் அச்சிடும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பட்ஜெட் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் ஆகியோர் பங்கேற்று அல்வா தயாரித்து அதிகாரிகளுக்கு வழங்கினர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அறிமுகப்படுத்தப்பட்ட மூக்குவழி கொரோனா மருந்து....