இதுவரை டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்படவில்லை

புதுச்சேரியில் இதுவரை டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

இதுவரை டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்படவில்லை

புதுச்சேரியில் இதுவரை டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சந்தித்து பேசினார். அப்போது, அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், அனைத்து வகையான கொரோனா வைரஸில் இருந்தும் நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம் என்றார். மேலும் புதுச்சேரியில் தற்போது வரை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது, அதன்படியே காவல்துறையினர் ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கின்றனர் என்றார்.

மேலும், மக்களுக்கு கெடுபிடி கொடுத்துத்தான் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது இல்லை, மக்களாக ஆபத்தை உணர்ந்து ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அவர், புதுச்சேரியில் இதுவரை டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும் கூறினார்.