"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை"  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம், 6 புள்ளி 5 சதவீதம் என்ற நிலையிலேயே தொடர்வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மூன்று நாள் நடைபெற்றது. கடைசி நாளான இன்று கூட்டம் முடிவடைந்த நிலையில், 5 முறை மாற்றப்பட்ட ரெப்போ வட்டி விகிதம், இம்முறை மாற்றமின்றி தொடர்வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும்... ரூ. 2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றம்!

அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதம் என்ற நிலையிலேயே தொடரும் என கூறப்பட்டுள்ளது. வளர்ச்சியை அதிகரிக்கும் அதே நேரத்தில், பணவீக்கத்தையும் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

2022 முதல் 2023ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 2 சதவீதம் என தொடர்ந்ததாகவும், இந்த ஆண்டுக்கான ஜி.டி.பி 6 புள்ளி 5 சதவீதமாகவே இருக்கும் எனவும் அவர் கூறினார்.